ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - கட்டிடங்கள் குழுங்கியதால் பதற்றம்!

 
Japan

ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே இன்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.

ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவின் கிழக்கு-தென்கிழக்கு பகுதியில் 107 கிலோ மீட்டர் தொலையில் இன்று மாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. சரியாக இந்திய நேரப்படி மாலை 3.33 மணிக்கு இந்த நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோளில் இந்த நிலநடுக்கம் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக அந்நாட்டு தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டது. நிலநடுக்கம் காரணமாக ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோ உட்பட பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கின.

நிலநடுக்கத்தால் பதற்றம் அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்சேதங்கள் மற்றும் பொருட்சேதங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர்.