இன்ஸ்டாவில் விவாகரத்தை அறிவித்த துபாய் இளவரசி

 
துபாய்

துபாய் இளவரசி ஷேக்கா மஹ்ரா, தனது இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் விவாகரத்தை அறிவித்துள்ளார்.

Dubai Princess Sheikha Mahra married to Multi billionaire Sheikh Mana

ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரும், துணை அதிபருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூமின் மகள் ஷேக்கா மஹ்ரா. 1994 ஆம் ஆண்டில் பிறந்த ஷேக்கா மஹ்ரா துபாயின் இளவரசி என்று அழைக்கப்பட்டு வருகிறார். இவருக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த ஷேக் மனா பிப் முஹம்மது பின் ராஷித் பின் மனா அல் மக்தூம் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் துபாய் இளவரசி ஷேக்கா மஹ்ரா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “அன்புள்ள கணவரே. நீங்கள் மற்ற தோழர்களுடன் நேரத்தை செலவிடுவதால், நான் விவாகரத்தை இதன் மூலம் அறிவிக்கிறேன். நான் உன்னை விவாகரத்து செய்கிறேன், நான் உன்னை விவாகரத்து செய்கிறேன், நான் உன்னை விவாகரத்து செய்கிறேன். பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் முன்னாள் மனைவி” எனக் குறிப்பிட்டுள்ளார்.