நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு- தண்டனையின்றி ட்ரம்ப் விடுதலை
ஆபாசப் பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் இருந்து ட்ரம்ப் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட்டார்.
அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்டு ட்ரம்ப் மீது 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் தெரிவித்து இருந்தனர். அதோடு மட்டுமில்லாது அதற்கான வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். இதனிடையே கடந்த 2016- ஆம் ஆண்டு ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் ட்ரம்புடனனான பாலியல் உறவில் ஈடுபட்டது குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதனிடையே ஸ்டோர்மி டேனியல்ஸை பேச விடாமல் இருக்க 1 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர்களை டொனால்டு ட்ரம்ப் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த தொகை ட்ரம்பின் தேர்தல் வரவு, செலவு கணக்கில் சட்டரீதியிலானதாக பதிவு செய்யப்பட்டிருப்பதாக கிரிமினல் வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் ஸ்டோர்மி டேனியல்ஸ் அளித்த குற்றச்சாட்டுகள் அடிப்படையில், கடந்த ஆண்டு மே மாதம் ட்ரம்ப் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆபாச பட நடிகைக்கு பணம் அளித்ததை மறைத்து முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் டிரம்ப் நிபந்தனையின்றி விடுவிப்பு ஜன.20-ல் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்க உள்ள நிலையில், அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் அமெரிக்க நீதிமன்றம் விடுவித்துள்ளது.