விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் மண் தோண்டி சோதனை!

விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் மண் தோண்டி சோதனை!

இலங்கையில் தமிழர்களாக தமிழீழம் எனும் தனி நாடு வேண்டும் என்று ஆயுத வழிப் போராட்டம் நடத்திய இயக்கங்களில் முதன்மையானது விடுதலைப் புலிகள் இயக்கம். வே.பிரபாகரன் தலைமையிலான அந்த இயக்கம், 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் கடும் பாதிப்பைச் சந்தித்தது. அவ்வியக்கம் முற்றிலுமாக அழித்தொழிக்கப் பட்டதாக இலங்கை அரசு தரப்பில் கூறப்பட்டது.

விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் மண் தோண்டி சோதனை!

2009 – இறுதி யுத்தம் முடிந்து பத்தாண்டுகளுக்கும் மேலாகி விட்டாலும், விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் அவ்வப்போது சோதனைகளைச் செய்வர் இலங்கை ராணுவத்தினர்.

விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் மண் தோண்டி சோதனை!

தற்போது மட்டக்களப்பு பொலாவெளி பகுதியில் உள்ள, நவகிரி பள்ளியை ஒட்டிய இடத்தில் புலிகள் பதுக்கி வைத்த ஆயுதங்கள், வெடிபொருட்கள் இருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. அதனால், நீதிமன்ற அனுமதியுடன் அங்கு சென்று மண்ணைத் தோண்டி தேடுதல் பணியை மேற்கொண்டனர். ஒருநாள் முழுக்க தேடியும் ஆயுதங்கள் ஏதும் கிடைக்காத நிலையில் தேடுதல் பணியை முடித்துக்கொண்டனர்.