மொரோக்கோ நிலநடுக்கம் - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800ஐ தாண்டியது!

 
Morocco Morocco

மொரோக்கோ நாட்டில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800ஐ தாண்டியுள்ளது

மொரோக்கோ நாட்டில் இன்று அதிகாலை 3:14 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் அங்கிருந்த வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். காயம் அடைந்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மராகேச் என்ற பகுதியில் இருந்து 72 கிலோமீட்டர் தூரத்தை மையமாகக் கொண்டு 6.8 என்ற  அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மொராக்கோவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அந்நாட்டிற்கு உதவ தயாராக இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். 

இந்த நிலையில், மொரோக்கோ நாட்டில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800ஐ தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றனர். நிலநடுக்கத்தால் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், அவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.