மொரோக்கோ நாட்டில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000ஐ தாண்டியது!

 
tn

மொரோக்கோ நாட்டில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000ஐ தாண்டியுள்ளது

வடக்கு ஆப்ரிக்காவில் உள்ள ஒரு குட்டி நாடு மொரோக்கோ. மொரோக்கோ நாட்டில் நேற்று அதிகாலை 3:14 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவானது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் அங்கிருந்த வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. இந்த நிலையில் 19 நிமிடங்களுக்கு பின்னர் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த இடிபாடுகளில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். காயம் அடைந்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மராகேச் என்ற பகுதியில் இருந்து 72 கிலோமீட்டர் தூரத்தை மையமாகக் கொண்டு  நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

tn

இந்த நிலையில், மொரோக்கோ நாட்டில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000ஐ தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றனர். நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்த நிலையில், அவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பலர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.