மொரோக்கோ நிலநடுக்கம் - உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2800ஐ கடந்தது!

 
tn

மொரோக்கோ நிலநடுக்கத்தால்  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2800ஐ கடந்தது.

மொரோக்கோ நாட்டில் கடந்த 9ஆம் தேதி அதிகாலை 3:14 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் அங்கிருந்த வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். காயம் அடைந்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

Morocco

மராகேச் என்ற பகுதியில் இருந்து 72 கிலோமீட்டர் தூரத்தை மையமாகக் கொண்டு 6.8 என்ற  அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

tn

இந்நிலையில் மொரோக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,862 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்  2,562 பேர் காயமடைந்துள்ளனர்.