உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது!
Aug 5, 2020, 07:36 IST1596593164000
கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இதுவரை இதுவரை உலகம் முழுவதும் 1 கோடியே 86 லட்சத்து 91 ஆயிரத்து 659 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1 கோடியே 19 லட்சத்து 08 ஆயிரத்து 712 பேர் குணமாகியுள்ளனர்.
இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது. இதுவரை 7லட்சத்து 03 ஆயிரத்து 371 பேர் பலியாகி உள்ளனர்