கொரோனா உறுதி செய்யப்பட்ட ஜார்ஜியா நாட்டின் பிரதமர்!

கொரோனா உறுதி செய்யப்பட்ட ஜார்ஜியா நாட்டின் பிரதமர்!

உலகையே அச்சப்பட வைக்கிற ஒரே வார்த்தை கொரோனா. நோய்ப் பரவலின் வேகம் மிக அதிகமாக இருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 4 கோடியே 73 லட்சத்து 27 ஆயிரத்து 404 பேர்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 12 லட்சத்து 11 ஆயிரத்து 428 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 3 கோடியே 40 லட்சத்து 36 ஆயிரத்து 325 நபர்கள்.

கொரோனா உறுதி செய்யப்பட்ட ஜார்ஜியா நாட்டின் பிரதமர்!

பல நாட்டு அதிபர்களுக்கும் பிரதமர்களுக்கும்கூட கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்க்கு கொரோனா தொற்று பாதித்து, சிகிச்சை பெற்று குணமடைந்து வந்துள்ளார். பிரேசில் அதிபருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று தேறி வந்தார்.

கொரோனா உறுதி செய்யப்பட்ட ஜார்ஜியா நாட்டின் பிரதமர்!

இந்நிலையில் ஜார்ஜியா நாட்டின் பிரதமர் Giorgi Gakharia -க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவரின் பயணத்தின் மூலமும், அலுவலகப் பணியாளர்கள் மூலமாகவும் தொற்று பரவியிருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. ஆனாலும், நோயின் அறிகுறிகள் தென்படாததால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

கொரோனா உறுதி செய்யப்பட்ட ஜார்ஜியா நாட்டின் பிரதமர்!

ஜாரிஜியாவில் இதுவரை 42,579 பேருக்குக் கோரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு, அவர்களில் 26,800 பேர் குணமடைந்துவிட்டனர். சிகிச்சை பலனளிக்காது 342 பேர் மரணம் அடைந்துவிட்டனர்.