ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் குண்டுவெடிப்பு - லெப்டினன்ட் ஜெனரல் பலி
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் குண்டுவெடிப்பு நடந்த சம்பவ உலக நாடுகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
உக்ரைன் நாடு நேட்டோ படைகளுடன் சேர முயன்ற நிலையில், இதனால் ஆத்திரம் அடைந்த ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக போர் தீவிரமடைந்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வழங்கிய ஏவுகணைகளை வைத்து ரஷ்யா மீது உக்ரைன் ரானுவன் தாக்குதல் நடத்தி வருகிறது. இதேபோல் ரஷ்யாவும் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் குண்டுவெடிப்பு நடந்த சம்பவ உலக நாடுகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த தாக்குதலில் ரஷ்ய ராணுவத்தின் உயர் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அணுசக்தி, உயிரியல், இரசாயன பாதுகாப்புப் படைகளின் (என்பிசி) தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.


