பாலுக்கு பதில் தண்ணீரை குடித்து வாழும் பச்சிளம் குழந்தைகள்! பசியால் 56 பேர் பலி

 
ச் ச்

காசாவில் இம்மாதத்தில் மட்டும் பட்டினியால் 56 பேர் உயிரிழந்துள்ளனர்.

காசா உணவுகள்

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் பயங்கரவாத இஸ்ரேலின் கொடூர தாக்குதல்கள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. மனித இன பேரழிவு பயங்கரவாதமாக அது தொடர்கிறது. இந்த வாரம் மட்டும் 500க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொன்றொழிக்கப்பட்டுள்ளனர். இன்னும் பல்லாயிரம் அப்பாவி மக்களின் உயிரைக் குடித்திட இஸ்ரேலின் டாங்கிகள் வெறிகொண்டு ஊடுருவிச் செல்கின்றன.எவ்வித நிவாரண பொருட்களும் அங்கே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாழ்வாதாரத்தை இழந்து கொடிய துயரத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கின்ற நிராயுதபாணியான அந்த மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் பயங்கர ஆயுதங்களால் கொடூரத் தாக்குதல்களை அன்றாட நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன. காஸாவில் நிவாரண முகாம்களாக செயல்பட்ட கட்டடங்கள் உட்பட அனைத்து கட்டடங்களும் வீடுகளும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. பச்சிளம் பாலகர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். மேலும் பசி கொடுமையால் உயிரிழக்கின்றனர். பெண்களும் முதியோர்களும் மிகக் கொடுமையான முறையில் கொன்றழிக்கப்படுகிறார்கள்.


பச்சிளம் குழந்தைகளுக்கு பால் இல்லாததால் தண்ணீரை மட்டுமே குடித்து உயிர் வாழும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதில் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான குழந்தைகள், தாங்கள் பிறக்கும்போது இருந்த எடையை விட தற்போது எடை குறைவாக உள்ளனர். குறிப்பால காசா முழுவதும் 24 மணி நேரத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டால் குறைந்தது 14 குழந்தைகள் இறந்துள்ளனர்.