கொலம்பியாவை உலுக்கிய நிலநடுக்கம்- 20 பேர் பலி
Aug 10, 2026, 20:55 IST1786375520858
கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சான்ஜோஸ் டெல் பால்மார் அருகே 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலி என்ற பகுதியில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததால் பீதியுடன் ஓடிய காட்சிகள் வெளியாகியுள்ளன. காலி நகரில் குறைந்தது 20 கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும், உள்ளே மக்கள் சிக்கியுள்ளதாகவும் அந்நகர மேயர் தெரிவித்துள்ளார். நிலநடுக்கத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்தனர். அண்டை நாடுகளான வெனிசுலா, ஈக்வடார் மற்றும் பனாமாவிலும் நில அதிர்வு உணரப்பட்டது.

