கொரோனா தடுப்பூசிகளை திரும்பப் பெறுகிறது ஆஸ்ட்ராஜெனகா நிறுவனம்!!

 
rr

உலகளவில் தங்கள் கொரோனா தடுப்பூசிகளை ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

corona virus

உலக அளவில் கொரோனா பரவி மக்களை முடக்கிய நிலையில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டன.  இங்கிலாந்து சேர்ந்த அஸ்ட்ராஜெனகா நிறுவனம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து கொரோனாவுக்கான தடுப்பூசி உருவாக்கியது.  இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய யூனியனில் ஒரு கோடியை 70 லட்சம் பேருக்கு அஸ்ட்ராஜெனகாவின் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் தடுப்பூசியால் உயிரிழப்பு மற்றும் பாதிப்பு ஏற்படுத்தாத இங்கிலாந்தில் 51 வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.  கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் தனக்கு மூளையில் ரத்த உறைந்ததாக ஜேமிஸ் காட் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.  கடந்தாண்டு மே மாதம் நடந்த விசாரணையின் போது தடுப்பூசியால் பொதுவாக ரத்தம் உறையாது என்று தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் வாதிட்டது. இருப்பினும் தற்போது தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு அரிதிலும் அரிதாக டிடிஎஸ் என்ற ரத்த உறைதல்  ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தடுப்பூசி நிறுவனம் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது. இது இந்திய மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது காரணம் அஸ்ட்ராஜெனகா கண்டுபிடித்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க உரிமம் பெற்ற சீரம் நிறுவனம், கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து மத்திய அரசுக்கு விற்பனை செய்தது. இந்தியாவில் சுமார் 160 கோடி டோஸ்கள், அதாவது, சுமார் 80 கோடி பேருக்கு மேலாக கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

 

corona

இந்நிலையில் உலகளவில் தங்கள் கொரோனா தடுப்பூசிகளை ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இரத்த உறைவு, ரத்த பிளேட்லெட்டுகள் எண்ணிக்கை குறைப்பு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக  இங்கிலாந்து நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டது  ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம்.

covid

இதன் காரணமாக கொரோனா தடுப்பூசிகளை  திரும்பப் பெற்றுள்ளது. அதேசமயம் கோவிஷீல்டு தடுப்பூசியின் பக்கவிளைவுகள்  குறித்து ஆய்வு மேற்கொள்ள மருத்துவ நிபுணர் குழுவை அமைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .