கொரோனா எதிரொலி- ஒலிம்பிக் போட்டி ரத்து ?

 

கொரோனா எதிரொலி- ஒலிம்பிக் போட்டி ரத்து ?

ஜப்பானில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் சூழலில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா எதிரொலி- ஒலிம்பிக் போட்டி ரத்து ?

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், அந்த போட்டிகளை வரும் 23 முதல் ஆகஸ்ட் 8 வரை நடத்த ஒலிம்பிக் கமிட்டி திட்டமிட்டது. இதற்காக அங்கு உயர்மட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பார்வையாளர்கள் இல்லாமல் போட்டியை நடத்தவும், போட்டியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யவும் திட்டமிடப்பட்டது.

இந்நிலையில் போட்டி துவங்குவதற்கு முன்பே வீரர்கள் வீராங்கனைகள் உள்பட 10 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது மட்டுமின்றி ஜப்பானில் தற்போது மூன்றாவது அலை தீவிரமாக பரவி வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்ய வேண்டும் என ஜப்பானிய அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பல நாடுகளிலிருந்து வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் உள்படழ் பலர்ழ் ஜப்பானுக்கு வருவதால் அங்கு கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் ஜப்பானில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகள் ரத்தாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.