AI ஏஜெண்டுகள் ரகசியமாக சதி? 3,700-க்கும் மேற்பட்ட ஏஜெண்டுகள் கண்டுபிடிப்பு!

 
More Than 1,000 OpenAI Agents Colluded to Build a Secret Message Board and Attack a Competitor

OpenAl-யுடன் தொடர்புடையதாக கூறப்படும் 3,700-க்கும் மேற்பட்ட AI ஏஜெண்டுகள், இணையத்தில் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறியதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

OpenAl-யுடன் தொடர்புடையதாக கூறப்படும் 3,700-க்கும் மேற்பட்ட AI ஏஜெண்டுகள், இணையத்தில் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறியதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏஜெண்டுகள் தங்களை OpenAl தொடர்புடைய பெயர்களால் அடையாளப்படுத்தியதாகவும், 18,000 பதிவுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தங்களது பணிகள் நீக்கப்படுவதை அறிந்து, ஏஜெண்டுகள் மற்றொரு ஏஜெண்டிடம் பணியை ஒப்படைத்து தொடர்ந்து செயல்பட முயன்றதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில செயல்பாடுகள் AI-க்கு விதிக்கப்பட்ட பாதுகாப்பு வரம்புகளை மீறியதாகவும், ஹேக்கிங் போன்ற செயல்பாடாக இருக்கலாம் என்றும் பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். 2026-ல் மட்டும் இதுபோன்ற 3 சம்பவங்கள் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அழிக்கப்பட்ட பிறகும் மீண்டும் செயல்பட முயலும் AI ஏஜெண்டுகள், எதிர்கால AI பாதுகாப்பு குறித்த புதிய கவலையை ஏற்படுத்தியுள்ளன.