காதலனால் கர்ப்பமானதால் ஆத்திரம்! தலையணையால் மகளை கொன்ற பெற்றோர்

 
s

 

ஈரானில் 19 வயது கர்ப்பிணிப் பெண் ஒருவர், ஆணவக் கொலை வழக்கில் அவரது பெற்றோரால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஈரானில் கௌரவக் கொலை வழக்கில் 19 வயது கர்ப்பிணிப் பெண், பெற்றோர்களால் அடித்து, விஷம் கொடுத்து, மூச்சுத்திணறடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.

மேற்கு ஈரானிய நகரமான சனந்தாஜில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஹெலியா ஃபத்தாஹி என்ற 19 வயதுபெண், தனது காதலருடன் உறவில் இருந்ததன் விளைவாக கர்ப்பமானார். இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்த ஹெலியாவின் பெற்றோருக்கு இந்த விவகாரம் தெரியவந்துள்ளது. இதை அறிந்த பெற்றோர் கோபமடைந்து, சுமார் 30 வலிப்பு நோய் மாத்திரைகளை கட்டாயப்படுத்தி மகளுக்கு கொடுத்துள்ளனர். ஆனாலும் மகள் உயிரிழக்கவில்லை. பிறகு மகளை அடித்தும், தலையணையை வைத்து மூச்சை அடைத்து சாகடித்துள்ளனர். மேலும் ஈரானில் தந்தை அல்லது தந்தை வழித் தாத்தா தனது குழந்தையை கொலை செய்தால், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படாது.  ஹெங்காவ் மற்றும் ஹானா என்ற மனித உரிமை அமைப்பு, இந்தக் கொலையை 'ஆணவக் கொலை' என்று கூறியுள்ளது.