58 கோடியை நெருங்கும் உலக அளவிலான கொரோனா பாதிப்பு

 
world corona

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 58 கோடியை நெருங்கி வரும் நிலையில், உயிரிழந்தோர்களின் மொத்த எண்ணிக்கை 64 லட்சத்தை தாண்டியுள்ளது 

சீனாவில் உள்ள வூஹான் நகரத்தில் கடந்த 2019ம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது.  கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது முதலே அதனால் அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்காதான். இதற்கு அடுத்ததாக இந்தியா, பிரேசில்,,பிரான்ஸ், இங்கிலாந்து, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டன. வைரஸ் தொற்று பரவ தொடங்கிய போது பெரும் சவாலை சந்தித்த சீனா, கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வைரஸ் பரவலை கட்டுப்படுத்தியது. உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் சீனாவில் குறைவான அளவிலேயே பாதிப்பு பதிவாகியது. கொரோனாவால் உலக நாடுகள் பெரும் பொருளாதார சரிவை சந்தித்தன. அடுத்தடுத்து கொரோனா அலைகள் வந்துகொண்டே உள்ளது. டெல்டா, டெல்டா பிளஸ், ஓமைக்ரான் என தொடர்ந்து வைரஸ் உருமாற்றம் அடைந்துகொண்டே வருவதால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. தடுப்பூசிகள் ஒருபக்கம் போடப்பட்டு வந்தாலும் வைரஸ் உருமாற்றத்தால் தடுப்பூசிகள் பலனளிக்கவில்லை. இருந்த போதிலும் தடுப்பூசி உயிரிழப்பை குறைத்து வருகிறது. 

china corona

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 கோடியே 92 லட்சத்து 81 ஆயிரத்து 407 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 35 லட்சத்து 56 ஆயிரத்து 163 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 54 கோடியே 93 லட்சத்து 11 ஆயிரத்து 362 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 64 லட்சத்து 13 ஆயிரத்து 882 பேர் உயிரிழந்துள்ளனர்.