உடலுறவு கொள்வதால் குரங்கம்மை பரவும் - எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு

 
who

உடலுறவு கொள்வதால் குரங்கம்மை நோய் பரவும் வாய்ப்பு உள்ளதால், பாலுறவு கொள்வதை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. 

கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது குரங்கம்மை நோய் உலகை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குரங்கம்மையின் தாக்கம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் குரங்கம்மை நோய் உலக சுகாதார அவசரநிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 5 பேருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது கேரளாவில் 3 பேருக்கும், டெல்லி மற்றும் தெலங்கானாவில் தலா ஒருவருக்கும் குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

monkeypox

இந்நிலையில், உடலுறவு கொள்வதால் குரங்கம்மை நோய் பரவும் வாய்ப்பு உள்ளதால், பாலுறவு கொள்வதை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.  இந்த குரங்கம்மை நோய், தோலோடு தோல் தொடுவதன் மூலம் பரவுவதாகவும், நோய் தாக்கம் உள்ளவர்கள் பயன்படுத்திய பொருட்களை உபயோகிக்கும் போது பரவுவதாகவும் சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில், உடலுறவு கொள்வதன் மூலம்தான் அதிகளவில் குரங்கம்மை நோய் பரவுவதாக வெளியாகியுள்ளதாகவும், வேறு எந்த வகைகளிலெல்லாம் பரவுகிறது என ஆய்வில் நடத்தப்பட்டு வருவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.