40 ரஷ்ய விமானங்களை சிங்கிளாக துவம்சம் செய்த உக்ரைன் வீரர், வீர மரணம்..

 
ukraine army man


 40 ரஷ்ய போர் விமானங்களை  தனி ஆளாக நின்று  சுட்டு வீழ்த்தி விட்டு உக்ரைன் போர்  வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்திருக்கிறார்.

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி தொடங்கியது.  இரண்டு மாதங்களை தாண்டி நீடித்து வரும் போரால்  உக்ரைனின் பல நகரங்கள் உருகுலைந்து  போயுள்ளன.  சின்னாபின்னமாகியுள்ள உக்ரைனில்  மக்கள் கொத்துகொத்தாக கொல்லப்பட்டு சாலைகளிலும், பதுங்கு குழிகளிலும் வீசப்பட்டுள்ளனர். ஆங்காங்கே  கும்பல் கும்பலாக நூற்றுக்கணக்கான உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன்..  இருந்தபோதிலும், போர் தொடங்கிய முதல் நாளிலிருந்தே உக்ரைன் படைகளும் ரஷ்யாவுக்கு கடும்  பதிலடி கொடுத்து வருகின்றனர். இதன் காரணமாகவே, உக்ரைன் தலைநகர் கீவ்வை   இன்றளவும் ரஷ்யாவால்  கைப்பற்ற முடியவில்லை.

40 ரஷ்ய விமானங்களை சிங்கிளாக துவம்சம் செய்த உக்ரைன் வீரர், வீர மரணம்..

அந்தவகையில், போர்  தொடங்கிய நாள் முதலாகவே உக்ரைன் போர் விமானி ஒருவர் ரஷ்ய விமானப் படையை திணறடித்து வருவதாக செய்திகள் வெளியாகின.  6 ரஷ்ய போர் விமானங்களை முதல் நாள் போரிலேயே அவர் அவர் சுட்டு வீழ்த்தினார். உக்ரைன் விமானப் படை வீரர்களிலேயே திறமையானவராகவும், தீரமானவராகவும் அறியப்பட்ட அந்த போர் விமானியின் விவரங்களை உக்ரைன் அரசு வெளியிடாமல் இருந்து வந்தது. 'கோஸ்ட் ஆஃப் கீவ்' (கீவ் நகரின் பேய்) என்ற புனைப்பெயரின் மூலமாகவே அவர் அடையாளப்படுத்தப்பட்டு வந்த அவர், தற்போது வீர மரணம் அடைந்திருக்கிறார்.

40 ரஷ்ய விமானங்களை சிங்கிளாக துவம்சம் செய்த உக்ரைன் வீரர், வீர மரணம்..

ரஷ்ய விமானப் படைக்கு மிகப்பெரிய சிம்ம சொப்பனமாக இருந்த அந்த வீரரின் பெயர்  ஸ்டெபான் டரபால்கா.   சிறிய கிராமத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிரந்த ஸ்டெபான்,   சிறு வயதில் இருந்தே போர் விமானியாக  வேண்டும் என்கிற கனவோரு இருந்தவர்.  அதன்படி தனது 20 வயதில்  உக்ரைன் விமானப் படையில் போர் விமானியாக இணைந்த அவர், சுமார் 18 ஆண்டுகள் அங்கு பணியாற்றி இருக்கிறார். தனது பணிக்காலத்தில் ஏராளமான வீர சாகசங்களை ஸ்டெபான் செய்துள்ளதாகவும்,  அவருக்கு  உக்ரைன் ராணுவத்தின் உயரிய விருது அவருக்கு வழங்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
 40 ரஷ்ய விமானங்களை சிங்கிளாக துவம்சம் செய்த உக்ரைன் வீரர், வீர மரணம்..
 கடந்த 13-ம் தேதியன்று கீவ் நகரை கைப்பற்றும் நோக்கில்  100க்கும் மேற்பட்ட ரஷ்ய போர் விமானங்கள் ஒரே நேரத்தில் படையெடுத்துள்ளன. அதிகளவில் போர் விமானங்கள் இல்லாததால் திணறிய உக்ரைன் அரசு சரணடையும் முடிவுக்கே வந்துவிட்டதாம்.. அப்போது  துணிட்டலாக ஸ்டெபான் ,  தனி ஒருவனாக ரஷ்ய போர் விமானங்களை எதிர்க்க போவதாக  கூறியிருக்கிறார்.  திறமையான வீரரை இழக்க விரும்பாத உக்ரைன் அரசு முதலில் மறுப்பு தெரிவித்திருக்கிறது. பின்னர் ஸ்டெபான் அவர்களை சமாதானப்படுத்தி,   தனியாக செல்வதுதான் இந்த தருணத்தில் நல்லது எனக் கூறி  தனது 'மிக் - 29' போர் விமானத்தில் புறப்பட்டுள்ளார்.  

40 ரஷ்ய விமானங்களை சிங்கிளாக துவம்சம் செய்த உக்ரைன் வீரர், வீர மரணம்..

 ரஷ்ய போர் விமானக் கூட்டத்துக்கு இடையே அதிரடியாக நுழைந்த ஸ்டெபான், சுழன்று சுழன்று பறந்து ரஷ்ய போர் விமானங்களை ஒன்றன் பின் ஒன்றாக சுட்டு வீழ்த்தினார்.   பெரும் கூட்டத்தில்  உக்ரைனின் தனி போர் விமானத்தை குறி வைத்து ரஷ்ய படைகளால்  தாக்க முடியாமல் போனது. இதனை தனக்கு சாதமாக பயன்படுத்தி 40 ரஷ்ய விமானப் படைகளை சுட்டு வீழ்த்தியிருக்கிறார் ஸ்டெபான். பின்னர் ரஷ்ய படைகள்  அவரது போர் விமானத்தை சுற்றிவளைத்து  சுட்டு வீழ்த்தின. இதில்  ஸ்டெபான் வீர மரணமடைந்தார்.  'கோஸ்ட் ஆஃப் கீவ்'  என்று அழைக்கப்பட்டு வந்த ஸ்டெபானின் விவரங்களை அண்மையில் தான் அந்நாடு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.