அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேத்திக்கும் சட்டக்கல்லூரி மாணவருக்கும் திருமணம்

 
joe biden grand daughter

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பேத்தி 28 வயதான நவோமி பைடனுக்கும், 24 வயதான சட்டக்கல்லூரி மாணவனுக்கும் வெள்ளை மாளிகையில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. 

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூத்த மகனான ஹண்டர் பைடன் மற்றும் முன்னாள் மனைவி கேத்தலின் புலேவுக்கு பிறந்தவர் 28 வயதான நவோமி பைடன். இவர் வாஷிங்டனில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், 28 வயதான நவோமி பைடன், 24 வயதான சட்டகல்லூரி மாணவன் பீட்டர் நில்லுவை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் குடும்பத்தினர் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து திருணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில், இவர்களின் திருமணம் நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் எளிமையான முறையில் நடந்தது. ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் தலைமையில் நடைபெற்ற திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள் சுமார் 250 பேர் கலந்து கொண்டனர். அதிபரின் குடும்ப உறுப்பினர்களின் திருமணங்கள் மற்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் அரிதாகவே வெள்ளை மாளிகையில் நடைபெறும். அந்த வகையில் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளை மாளிகையில் நடைபெற்ற முதல் திருமண நிகழ்ச்சி இதுவாகும். இதுவரை அமெரிக்க வெள்ளை மாளிகையில், 19 திருமணங்கள் மற்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் நடந்துள்ளது.