போராட்டக்காரர்களின் குறைகளை சரி செய்ய வேண்டும் - இலங்கை அரசுக்கு ஐ.நா. அறிவுறுத்தல்

 
UN

இலங்கையின் தற்போதைய நிலவரத்தை உண்ணிப்பாக கவனித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு  ராஜபக்சே குடும்பமே காரணம் என , அரசுக்கு எதிராக மக்கள் கடந்த 3 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.  மக்கள் போராட்டம் வெடித்ததும், மஹிந்த ராஜபக்சே தலைமையிலான அரசு பதவி விலகி, ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார்..  ஆனால் அதன்பிறகும் அங்கு  பிரச்சனைகளும், நெருக்கடிகளும் குறைந்தபாடில்லை. மக்கள் போராட்டமும் முடிவுக்கு வரவில்லை.   3 நாட்களுக்கு முன்பு அதிபர்  மக்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்ததால் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியது.   இதனையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினருடன் தப்பியோடினார்.  மக்களின் போராட்டத்தை தொடர்ந்து நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்து இடைக்கால அதிபர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுருந்தார். மேலும், சட்டம் - ஒழுங்கை கட்டுக்குள் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை எடுக்க ராணுவத்திற்கு உத்தரவிட்டுருந்தார். இதனிடையே இன்றும் போராட்டம் தொடர்ந்ததால் தலைநகர் கொழும்புவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

srilanka protest

இந்நிலையில், இலங்கையின் தற்போதைய நிலவரத்தை உண்ணிப்பாக கவனித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். கலவரத்திற்கான காரணம் மற்றும் போராட்டக்காரர்களின் குறைகளை சீர்செய்வது மிகவும் முக்கியம் எனவும், அமைதியான முறையில் ஜனநாயக மாற்றத்திற்கு சமரசம் செய்யுமாறு அனைத்து கட்சித் தலைவர்களையும் கேட்டுக் கொள்கிறேன் எனவும், அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.