பெண்ணின் காதுக்குள் புகுந்த பாம்பு.. வைரலாகும் வீடியோ

 
sன்

பெண்ணின் காதுக்குள் பாம்பு புகுந்து விட்டதால் இந்த பாம்பை வெளியேற்ற முயற்சி செய்கிறார் மருத்துவர்.  இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவில் அசந்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் வாய் வழியாக நாலடி நீள வீச பாம்பு வயிற்றுக்குள் சென்றது.  பின்னர் மருத்துவர்கள் இந்த பாம்பை  வாய் வழியாகவே வெளியே எடுத்தனர்.

 ரஷ்யாவில் தஜஸ்தான் மாகாணம் லெவஷி கிராமத்தைச் சேர்ந்த பெண் களைப்பில் வீட்டு வாசலில் படுத்து தூங்கி இருக்கிறார்.   தூக்கத்தில் அவர் குறட்டை விடும் வழக்கம் உள்ளவர்.   வாயை திறந்து குறட்டை விட்டு தூங்கி இருக்கிறார்.  அப்போது அந்த வழியே சென்ற நாலு அடி நீளம் கொண்ட பாம்பு ஒன்று அந்த பெண்ணின் வாய் வழியாக புகுந்து வயிற்றுக்குள் சென்று இருக்கிறது.  

 வயிற்றுக்குள் சென்றதும் அந்த பாம்பு உருளவும், அந்த பெண் திடீரென்று கண் விழித்திருக்கிறார்.  வயிற்றுக்குள் ஏதோ அசைவதை போல உணர்ந்ததால் அந்த பெண் அலறி அடித்து மருத்துவர்களிடம் ஓடி இருக்கிறார்.    அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றில் ஏதோ உருளுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  அதன் பின்னர் அந்த பெண்ணுக்கு மயக்கம் மருந்து கொடுத்து அந்த பொருளை வாய் வழியை எடுக்க முயற்சி செய்தனர். 

 தொண்டை வழியே ஒரு குழாயை பொருத்தி வைத்து  அந்த பொருளை வெளியே எடுத்து பார்த்தபோது மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.   வெளியே எடுத்தது நான்கு அடி நீளம் உள்ள விஷ பாம்பு என்பது தெரிய வந்தது.   மருத்துவர்கள் அந்த பெண்ணின் வாயில் இருந்து பாம்பு வெளியே எடுத்து வீடியோ அப்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.  

இந்த நிலையில் தற்போது ஒரு பெண்ணின் காதுக்குள் பாம்பு புகுந்து இருக்கிறது.  இது குட்டி பாம்பு என்று தெரிகிறது.  இந்த பெண் யார்?  இந்த சம்பவம் எங்கே நடந்தது?  என்று தெரியவில்லை .  ஆனால் அந்த பெண்ணின் காதுக்குள் புகுந்த பாம்பை வெளியே எடுக்க மருத்துவர் வெகு நேரம் போராடிக் கொண்டிருக்கிறார்.  இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.