அல்கொய்தா தலைவர் கொல்லப்பட்டது உறுதியாகவில்லை - தலிபான்கள்

 
Talibans

அல்கொய்தா அமைப்பின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி அப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் கொலை செய்யப்பட்ட வெளியான தகவல் உறுதி செய்யப்படவில்லை என தலிபான்கள் தெரிவித்துள்ளனர். 

ஒசாமா பின்லேடனுக்கு பிறகு அல்கொய்தா அமைப்பை வழி நடத்திய அய்மான் அல் ஜவாஹிரி, பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்ததோடு, பல பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டு வந்தான். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அப்கானிஸ்தானில் சிஐஏ நடத்திய ட்ரோன் தாக்குதலில் அல்கொய்தா அமைப்பின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அய்மான் அல் ஜவாஹிரி டிரோன் தாக்குதலில் உயிரிழந்தது குறித்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியிட்டார்.

Al Qaeda

இந்நிலையில், அல்கொய்தா அமைப்பின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி அப்கானிஸ்தானில் தஞ்சமடைந்தது மற்றும் கொல்லப்பட்டது தொடர்பான எந்த தகவலும் உறுதி செய்யப்படவில்லை என தலிபான்கள் அறிவித்துள்ளனர். அமெரிக்கா தெரிவித்துள்ளபடி, அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக தலிபான்கள் கூறியுள்ளனர். இது பற்றிய உண்மைத் தன்மையைக் கண்டறிய தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.