மாலத்தீவில் இருந்து சிங்கப்பூருக்கு தப்பியோடும் கோத்தபய

 
gotabaya

இலங்கை அதிபர் கோத்தபய மாலத்தீவில் இருந்து விமான மூலம் சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு  ராஜபக்சே குடும்பமே காரணம் என , அரசுக்கு எதிராக மக்கள் கடந்த 3 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.  மக்கள் போராட்டம் வெடித்ததும், மஹிந்த ராஜபக்சே தலைமையிலான அரசு பதவி விலகி, ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார்..  ஆனால் அதன்பிறகும் அங்கு  பிரச்சனைகளும், நெருக்கடிகளும் குறைந்தபாடில்லை..   மக்கள் போராட்டமும் முடிவுக்கு வரவில்லை.    3 நாட்களுக்கு முன்பு அதிபர்  மக்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்ததால் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியது.   இதனையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினருடன் தப்பியோடினார்.  உயிருக்கு பயந்து தலைமறைவாகியிருக்கும்  கோத்தபய எங்கிருக்கிறார் என்கிற விவரம்  வெளியாகமல் இருந்தது. மாலைதீவுக்கு புறப்பட்டுச் சென்றதாக இலங்கை குடியுரிமை அதிகாரி ஒருவர் தெரிவித்திந்தார். இதனையடுத்து கோத்தபய மாலத்தீவில் தஞ்சமடைந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், மாலத்தீவில் வாழும் இலங்கை மக்கள் சிலர் கோத்தபயவிற்கு ஆதரவு அளிக்க கூடாது என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

saudi arabian

இந்நிலையில், கோத்தபய மாலத்தீவில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் அவர் தனது குடும்பத்துடன் சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றதாக சிங்கப்பூர் செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.