பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மகிந்த ராஜபக்சே..போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் இலங்கையில் ஊரடங்கு அமல்.

 
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார். முன்னதாக  போராட்டக்காரர்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால், பல இடங்களில் வன்முறை வெடித்தை அடுத்து  நாடு முழுவதும் அவரச நிலை பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  ராஜபக்சே குடும்பத்தினரின் தவறான முடிவுகளே இலங்கையின் இத்தகைய நிலைக்கு காராணம் எனவும்,  பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று  அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலகக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.. இலங்கை அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளும், கூட்டணிக் கட்சிகளும் கூட போர்க்கொடி துக்கியுள்ளன.  ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு போராட்டம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் பதவியையும் கொடுத்து  ஆட்சியமைக்க வருமாறு அழைப்பு விடுத்தும் அதனை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை..  

கொந்தளிக்கும் மக்கள்.. திணறும் இலங்கை அரசு.. - அவசர நிலை பிரகடனம் வாபஸ்..

இலங்கையில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு , போராட்டக்காரர்களை பாதுகாப்பு படையினர் ஒடுக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.  இருந்தபோதிலும் மக்கள் போராட்டம் ஆங்காங்கே தீவிரமடைந்த வண்ணமே இருந்தது. ராஜபக்சே ராஜினாமா செய்யக்கோரி தொடர் போராட்டங்கள் நடந்துவந்த நிலையில், அவரை பதவி விலக அதிபர் கோத்தபய கேட்டுக்கொண்டிருந்தார்.  எனினும், ராஜபக்சே ராஜினாமா செய்யமாட்டார் என்று ஆளுங்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து கூறி வந்தனர்.

பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மகிந்த ராஜபக்சே..போராட்டத்தில்  வன்முறை வெடித்ததால்  இலங்கையில் ஊரடங்கு அமல்.

இந்நிலையில், தலைநகர் கொழும்புவில் உள்ள பிரதமர் மகிந்த ராஜபக்சே வீட்டின் முன்பு திரண்ட ஏராளமான பொதுமக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.  பின்னர் அங்கு திரண்ட ராஜபக்சே ஆதரவாளர்கள் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர்..  ராஜபக்சே ஆதரவாளர்கள் சென்ற பேருந்தை, பொதுமக்கள் அடித்து நொறுக்கினர்.   எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவையும் தாக்க முயன்றதால்  பதற்றமான சூழல் ஏற்பட்டது.  பின்னர் காவல்துறையினர்  தண்ணீரை பீய்ச்சியடித்து அவர்களை கலைத்தனர்.

பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மகிந்த ராஜபக்சே..போராட்டத்தில்  வன்முறை வெடித்ததால்  இலங்கையில் ஊரடங்கு அமல்.

இந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் தடுக்க கொழும்புவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு  கொழும்பு மற்றும் மேற்கு மாகாணங்களில் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலை, இலங்கை முழுவதும் உடனே அமலுக்கு வருவதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. இந்த நிலையில் தற்போது  இலங்கை பிரதமர் ராஜபக்சே, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மக்களுக்காக எந்த தியாகத்தையும் ஏற்கத் தயார் என மகிந்த ராஜபக்சே தெரிவித்திருக்கிறார்.