அதிபர் பதவியை ராஜினாமா செய்தார் கோத்தபய ராஜபக்சே

 
kotha paya rajapakse

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு  ராஜபக்சே குடும்பமே காரணம் என , அரசுக்கு எதிராக மக்கள் கடந்த 3 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.  

Which direction for the Gotabaya presidency? | Daily FT

மக்கள் போராட்டம் வெடித்ததும், மஹிந்த ராஜபக்சே தலைமையிலான அரசு பதவி விலகி, ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார்..  ஆனால் அதன்பிறகும் அங்கு  பிரச்சனைகளும், நெருக்கடிகளும் குறைந்தபாடில்லை. மக்கள் போராட்டமும் முடிவுக்கு வரவில்லை.   3 நாட்களுக்கு முன்பு அதிபர்  மக்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்ததால் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியது.   இதனையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினருடன் மாலத்தீவுகளுக்கு தப்பியோடினார். 


அங்கிருந்து கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு செல்வதாக தகவல் வெளியானது. ஆனால் கோத்தபய ராஜபக்சேவுக்கு அடைக்கலம் தரவில்லை என்றும்,  தனிப்பட்ட பயணமாக கோத்தபாய ராஜபக்சே வருகை தருவதாகவும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. இந்நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை இலங்கை நாடாளுமன்ற சபாநாயகருக்கு அவர் அனுப்பிவைத்தார்.