சேகுவேரா மகன் காமிலோ குவேரா மாரடைப்பால் மரணம்

 
செ

புரட்சியாளர் சேகுவேராவின் மகன் காமிலோ குவேரா(60) மாரடைப்பால் மரணம் அடைந்தார்.    வெனிசுலா பயணத்தின்போது திடீர் மாரடைப்பு  ஏற்பட்டு அவர் மரணம் அடைந்தார்.

 உலக அளவில் புரட்சிக்கு சிறந்த உதாரணமாக திகழ்ந்தவர் சேகுவாரா.    பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான கியூபா நாட்டின் புரட்சி இயக்கமான ‘ஜூலை 26’ இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டவர் சேகுவாரா.   கியூபா புரட்சி வெற்றியடைந்த பின்னர் அந்நாட்டின் தொழில்துறை அமைச்சரானார்.

ச்

 பின்னர் பொலிவிய நாட்டு புரட்சிகர போராட்டத்தில் ஈடுபட்டார்.  பொலிவிய ராணுவத்தால் சேகுவாரா உயிரோடு பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.  சேகுவாரா இளைய மகன் கமிலோ சேகுவாரா.    இவர் சேகுவாரா ஆய்வு மையத்தின் இயக்குநராக பணிபுரிந்து வந்தார்.  

 வெனிசுலா நாட்டின் சராகவ் நகருக்கு பயணம் மேற்கொண்ட போது திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.  மாரடைப்பு ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே அவர் மரணம் அடைந்துள்ளார்.

 கமிலோ சேகுவாராவின் மறைவுக்கு கியூபா நாட்டு அதிபர் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

ச்

சேகுவேராவுக்கும் அலெய்டா மார்ச்சுக்கும் பிறந்த நான்கு குழந்தைகளில் காமிலோ நான்காவது தாக பிறந்தவர்.  சேகுவேரா மையல் அவர் தொடரபான ஏராளமான ஆவணங்கள், நூல்கள் உள்ளன. தாய் அலெய்டாவுடன் இணைந்து  காமிலோ பணிபுரிந்து வந்தார்.

பொது இடங்களிலில் பெரும்பாலும் தலைகாட்ட மாட்டார் காமிலோ.  தனதுதந்தை சேகுவாராவை கவுரவிக்கும்  நிகழ்வுகளில் மட்டும்  பங்கேற்று வந்தார்.  வணிக விளம்பரங்களில் தனது தந்தையின் படம் பயன்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தவர் காமிலோ.

சுய்லென் மிலானெஸ் என்கிற பிரபல பாடகியை திருமணம் செய்திருந்தார் காமிலோ.  காமிலா என்கிற மகள் உள்ளார். துணைவியார் சுய்லென் முன்னதாகவே காலமாகிவிட்டார்.