ராஜபக்சேவை கைது செய்யணும்- நீதிமன்றத்தில் வழக்கு

 
ra

 மகிந்த ராஜபக்சேவை கைது செய்யக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.   அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதற்காக இலங்கை முன்னாள் பிரதமர் ராஜபக்சேவை கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்று கொழும்பு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 இலங்கையில் பொருளாதார நெருக்கடி கடுமையாக நிலவி வருவதால் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இதனால் இந்த பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக அதிபர் கோத்தபயாவும்,  பிரதமர் மஹிந்த ராஜபக்சேவும் பதவி விலக வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதில் மஹிந்தபட்ச பதவி விலகினார்.

na

 அமைதியாக போராடி வந்த மக்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.   இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வன்முறை வெடித்தது.  ராஜபக்சே வீடுகள் மற்றும் அவரது ஆளுங்கட்சியினர் , ஆதரவாளர்கள் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.  இதனால் இலங்கை பற்றி எரிந்த்து.  இதை அடுத்து மகிந்த ராஜபக்சே பதவி விலகினார்.    இலங்கையில் இதனால் பெரும் பதற்றம் உருவாகி வரும் நிலையில் மகிந்த ராஜபக்சேவும் அவரது மகன் நமல் ராஜபக்சேவும் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல இருப்பதாக தகவல் வெளியானது.

 ஆனால் இவர்கள் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் இவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறது நீதிமன்றம்.  இந்த நிலையில் டெம்பிள் ட்ரீஸ், கலே  பகுதிகளில் அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக சதித்திட்டம் தீட்டி இருக்கும் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளதால் மகிந்த ராஜபக்சே உட்பட ஏழு பேரை கைது செய்ய குற்றப்பிரிவு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் கொழும்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.