5அடி ராட்சத முதலையை விழுங்கிய மலைப்பாம்பு.. வைரலாகும் வீடியோ..

 
மலைப்பாம்பு

அமெரிக்காவில் 5 அடி நீள ராட்சத முதலையை மலைப்பாம்பு முழுங்கிய நிலையில், பாம்பின் உடலில் இருந்து முதலையை வெறியேற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.  

பொதுவாகவே இடம் மாறினாலும் ஒரு சில விலங்குகளின் அடிப்படைத் தன்மை என்பது மாறாது.   தனது அடிப்படை தன்மை மாற்றிக்கொள்ளாமல்  புதிய சூழலில் தன்னை தகவமைத்து வாழப் பழகிவிடும். இது உலகில் உள்ள அனைத்து விதமான விலங்குகளுக்கும் பொருந்தும்.  அப்படி,  புளோரிடா மாகாணத்திற்கு மாற்றப்பட்டு வளர்க்கப்பட்டு வந்த  மலைப்பாம்பு ஒன்று   ராட்சச முதலையை  அப்படியே விழுங்கியுள்ளது.  உலகின் மிக நீண்ட பெரிய பாம்பு வகைகளில் ஒன்று பர்மீஸ் மலைப்பாம்பு. பொதுவாக இந்த வகை பாம்பு  20 அடிக்கு மேல்  வளருமாம்.  

5அடி ராட்சத முதலையை விழுங்கிய மலைப்பாம்பு..  வைரலாகும் வீடியோ..

அந்தவகையில்   18 அடி நீளம் கொண்ட பர்மீஸ் மலைப்பாம்பு, 5 அடி நீளமுள்ள ராட்சத முதலையை அண்மையில் விழுங்கியுள்ளது.  இதனையடுத்து அந்த பாம்பை கொன்று முதலையை அதன் குடலில் இருந்து வெளியேற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து தெரிவித்துள்ள  விலங்கியல் அறிஞர்கள்,   மலைப்பாம்பு 5 அடி நீள முதலையை விழுங்குவதற்கு  தெற்கு புளோரிடாவின் மிதவெப்பமண்டல சூழல் மற்றும் பர்மிய மலைப்பாம்புகளின் நீண்ட ஆயுள் மற்றும் விரைவான இனப்பெருக்கம் ஆகியவையே காரணம் என்று தெரிவித்துள்ளனர்.  பின்னர் அந்த மலைப்பாம்பு,  நெக்ரோஸ்கோபி மற்றும் அறிவியல் மாதிரி சேகரிப்புக்கான ஆராய்ச்சி ஆய்வகத்திற்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.