கோத்தபய ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும் - போராட்டக்காரர்கள் வலியுறுத்தல்

 
gotabaya rajapaksa

இலங்கை திரும்பியுள்ள முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், விலைவாசி வின்னை முட்டும் அளவிற்கு உயர்ந்தது. இதற்கு ஆட்சியில் இருந்த ராஜபக்சே குடும்பத்தினரே காரணம் என அந்நாட்டு  மக்கள் அனைரும் போராட்டத்தில் குதித்தனர்.  தொடர்ந்து பல மாதங்கள் நீடித்த போராட்டத்தின் பலனாக முதலில் மகிந்த பிரதமர் மகிந்த ராஜபக்சே, பின்னர் அமைச்சர்கள், அடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே என அனைவரும் அடுத்தடுத்து பதவி விலகினர்.  மக்கள் நெருக்கடியால் கோத்தபய ராஜபக்சே உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவரும் வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்தனர்.   இதனையடுத்து இலங்கையின் புதிய அதிபராக  கடந்த மாதம் 21 ஆம் தேதி ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார்.

srilanka protest

இலங்கையில் இருந்து சிங்கப்பூர் தப்பிச்சென்ற கோத்தபய, பின்னர் விசா காலம் முடிவடைந்ததையடுத்து கடந்த11ம் தேதி தாய்லாந்து சென்றார். அந்நாட்டின் பாங்காங் நகரில் ஒரு ஹோட்டலில் தங்கினார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அவர் இலங்கை திரும்பினார்.  அவருக்கு இலங்கை அரசு சார்பில் கொழும்பில் பங்களா ஒதுக்கப்பட்டு உள்ளது. அந்த பங்களாவில் அவர் தங்கியுள்ளார். பங்களாவை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் மற்றும் சில தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.  இலங்கையில் உள்ள 2.2 கோடி மக்களுக்கு துயரத்தை ஏற்படுத்தியதற்காக அவர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனவும், கோத்தபய ராஜபக்சேவை எந்த நாடும் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லததால், அவர் மறைந்திருக்க இடமில்லாமல் நாடு திரும்பியுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.