பிஜி தீவிற்கு அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவு

 
earth

பிஜி தீவிற்கு அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகி உள்ளது.

பிஜி தீவு என்பது மெலனீசியாவில் பசிபிக் பெருங்கடலின் தெற்கே அமைந்துள்ள ஒரு தீவு நாடு ஆகும். இது நியூசிலாந்தின் வடக்குத் தீவில் இருந்து வடகிழக்கே 1100 கடல்மைல்கள் தூரத்தில் உள்ளது. இந்நிலையில்,  பிஜி தீவின் மேற்கு வடமேற்கே 399 கி.மீ. தொலைவில் சுவா என்ற இடத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 587.2 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்து உள்ளது. எனினும், இதனால் சுனாமி பாதிப்புக்கான ஆபத்து எதுவும் இல்லை என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்து உள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.