பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..

 
நிலநடுக்கம்

வடக்கு பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியுள்ளது.  

நிலநடுக்கம்

  பிலிப்பைன்ஸின் வடக்கு பகுதுயில்  உள்ள லூசோன் தீவில்  அப்ரா மாகாணம் அமைந்துள்ளது.  இது தலைநகர் மணிலாவில் இருந்து 300 கி.மீட்டர் தொலைவில் உள்ள மலைகள் சூழ்ந்த பகுதியாகும்.  இந்நிலையில்  இன்று, இந்த பகுதியில்  சக்திவாய்ந்த  நிலநடுக்கம் ஏற்பட்டது.   பயங்கர் சத்தத்துடன் ஏற்பட்ட   இந்த நிலநடுக்கம்   7.3 ரிக்டர் அளவில்  பதிவானது.  அதிர்வு உணரப்பட்டதை அடுத்து, பீதியடைந்த மக்கள்  அலறியடித்துக்கொண்டு  வீட்டைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் மற்றும் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.  

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..

நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.  ஆனாலும்  அதிகளவில் பொருட் சேதங்கள் ஏற்படுத்தியுள்ளதாக  பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரம் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை..  மேலும் , பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள பிழைகளின் வளைவான பசிபிக் "ரிங் ஆஃப் ஃபயர்" உடன் அமைந்துள்ளதால்,  பிலிப்பைன்ஸில்  அதிகளவிலான  பூகம்பங்கள் ஏற்படுகிறது.   ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 சூறாவளி மற்றும் வெப்பமண்டல புயல்களால் பிலிப்பைன்ஸ் தாக்கப்படுகிறது. இது உலகின் மிகவும் பேரழிவுக்கு உள்ளாகும் நாடுகளில் ஒன்றாகும். 1990ல் வடக்கு பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 2,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.