பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவு

 
earth

ஆஸ்திரேலியாவின் அண்டை நாடான பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில்  7.7 ஆக பதிவானது. 

பப்புவா நியூ கினியா ஒரு தீவு நாடாகும். இது ஆஸ்திரேலியாவிற்கு அருகே அமைந்துள்ளது. இந்நிலையில், பப்புவா நியூ கினியா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 65 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தின்போது பப்புவா நியூ மினியாவில் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள், மற்றும் உயிர்சேதங்கள் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. நேற்று முன் தினம் சீனாவிலும், நேற்று இந்தோனேசியாவிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடதக்கது.