நேபாளத்தில் பயணிகள் விமானம் விபத்து : 40 பேர் உயிரிழப்பு.. மீட்பு பணிகள் தீவிரம்..

நேபாளத்தில் பயணிகள் விமானம் விபத்து : 40 பேர் உயிரிழப்பு.. மீட்பு பணிகள் தீவிரம்..

நேபாளத்தில் 72  பயணிகளுடன் புறப்பட்டு சென்ற பயணிகள் விமானம் ஓடுதளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.  இதுவரை 40 பேரின்உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள்  தெரிவித்துள்ள நிலையில்,  மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

நேபாளத்தில் பயணிகள் விமானம் விபத்து : 40 பேர் உயிரிழப்பு.. மீட்பு பணிகள் தீவிரம்..

நேபாள நாட்டின் பொக்காரோ விமான நிலையத்தில் இருந்து 68  பயணிகள்  மற்றும் 4 விமான பணியாளர்களுடன் யேட்டி (Yeti)விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இதில் இந்தியா, நேபாளம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பயணித்துள்ளனர்.  இந்நிலையில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக , அந்த விமான ஓடுதளத்திலேயே விழுந்து விபத்துக்குள்ளானது. விமானம் விழுந்த உடனேயே தீப்பற்றி எரிந்தது.

நேபாளத்தில் பயணிகள் விமானம் விபத்து : 40 பேர் உயிரிழப்பு.. மீட்பு பணிகள் தீவிரம்..

இந்த விமானத்தில் பயணித்த 72 பேரில்,  40 பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 5 பேர் இந்தியர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் மீட்பு பணி தொடர்ந்து தீவிரமாக  நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,  விபத்துக்குள்ளான பொக்காரோ விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.  விமானம் தீப்பற்றியதால் அந்த இடம் முழுக்க புகை மண்டலமானது. ஓடுதளத்திலேயே விமானம் விபத்துக்குள்ளானது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.