ஆபாச படம் பார்த்த அமைச்சர்! 12 பெண் எம்.பிக்கள் புகார்

 
செ

அலுவல் நேரத்தில் அமைச்சர் ஒருவர் செல்போனில் ஆபாச படம் பார்த்தார் என்று பெண் எம்பிக்கள் 12 பேர் அரசு தலைமை கொறடா விடம் பரபரப்பு புகார் அளித்திருக்கிறார்கள்.  பெண் 12 பேர் ஒரே நேரத்தில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 ஐரோப்பிய நாடுகளில் ஒன்று பிரிட்டன்.   பிரிட்டனில் பாராளுமன்ற கூட்டம் நடந்து வருகிறது.   கூட்டத்தில் அலுவல் நேரத்தின்போது அமைச்சர் ஒருவர் செல்போனில் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்.   ஆளும் பழமைவாதக் கட்சியை சேர்ந்த பெண் எம்பிக்கள் இதைக் கண்டு கொதித்தெழுந்து இருக்கிறார்கள்.

b

 உடனே அவர்கள் அந்த அமைச்சருக்கு எதிராக அரசு தலைமை கொறடா கிறிஸ் ஹீடன் ஹாரிஸிடம் புகார் அளித்திருக்கிறார்கள்.   12 எம்பிக்களின் புகாரை பெற்றுக் கொண்ட அரசு கொறடா இதுகுறித்து நாடாளுமன்ற குறைதீர்ப்பு குழுவின் விசாரணைக்கு அனுப்ப உத்தரவிட்டு இருந்தார்.

 விசாரணை அறிக்கையின் படி சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தலைமை கொறடா உறுதி அளித்திருந்தார்.   ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கிய அமைச்சரிடம் நாடாளுமன்ற குறைதீர்ப்பு குழு விசாரணையை தொடங்கி இருந்தது.  இதனால் பிரிட்டன்  அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

இதற்கிடையில்,  ஆபாசத்தைப் பார்த்தை விசாரணைக்குழு  கண்டறிந்ததால் சம்பந்தப்பட்டவர் இடைநீக்கம் செய்யப்பட்டார் என்று தகவல்.