சுமார் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மைக்ரோசாஃப் நிறுவனம்!

 
tn

மைக்ரோசாப்ட் நிறுவனம் மனித வளம் மற்றும் பொறியியல் பிரிவில் சுமார் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .இது அந்நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் ஐந்து சதவீதம் ஆகும்.

உலகின் முன்னணி நிறுவனமாக கருதப்படும் மைக்ரோசாப்ட் நிறுவனம் உலகம் முழுவதும் 2 லட்சத்து 21 ஆயிரம் ஊழியர்களை உள்ளடக்கி இயங்கி வருகிறது.  ஒரு லட்சத்து 22 ஆயிரம் அமெரிக்காவிலும்,  99 ஆயிரம் பேர் உலகம் முழுவதும் உள்ள அதன் கிளை நிறுவனங்களிலும் பணிபுரிந்து வருகின்றனர்.  

tn

இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திலிருந்து ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  அதாவது 11 ஆயிரம் பேர் ஒரே அடியாக பணியில் இருந்து நீக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.  மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மனித வளம் மற்றும் பொறியாளர் பிரிவுகளில் தற்போது பணிபுரிந்து வரும் நபர்களை ஆட்குறைப்பு செய்ய முடிவு எடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில்  இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

ttnமுன்னதாக twitter,  meta போன்ற பல பெரிய நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் அமேசானில் நிறுவனத்தில் இருந்து 20 ஆயிரம் பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.