டுவிட்டரை தொடர்ந்து பேஸ்புக்கிலும் பணிநீக்க நடவடிக்கை - அதிர்ச்சியில் ஊழியர்கள்

 
fb

பேஸ்புக் நிறுவனத்தில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான  எலான் மஸ்க், பிரபல சமூக வலைதள பக்கமான டுவிட்டரை வாங்கினார்.  ட்விட்டர் நிறுவனத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த உடனே, முதல் வேலையாக  ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வாலை பணி நீக்கம் செய்தார். அவர் மட்மின்றி  ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், சட்டத்துறை தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் என உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து அதிரடியாக  பணி நீக்கம் செய்தார். மேலும் பணி நீக்கம் செய்யப்பட வேண்டிய தொழிலாளர்களின் பட்டியலை அளிக்க மேலாளர்களுக்கு எலான் மஸ்க் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி, டுவிட்டரின் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், டுவிட்டரை தொடர்ந்து பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவும் ஊழியர்கள் குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதன்படி பேஸ்புக் நிறுவனத்தில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தேவையற்ற செலவுகளை குறைக்கும் வகையில் பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெக் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இதுகுறித்து தெரிவித்துள்ள மார்க் சக்கர்பெக், பணிநீக்க நடவடிக்கையால் பலர் சிரமத்திற்குள்ளாகலாம், அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். ஆனால் வீண் செலவுகளை குறைக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.