இங்கிலாந்து புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வு

 
liz

இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிரிட்டன் பிரதமராகிறார் லிஸ் டிரஸ் | Dinamalar Tamil News

இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை அடுத்து, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 2-ம் தேதி நடைபெற்றது. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக்குக்கும், தற்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் டிரஸ்க்கும் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், ஆளும் கட்சியின் தலைவருக்கான தேர்தலில் லிஸ் டிரஸ் வெற்றி பெற்றார். டேவிட் கேமரூன், தெரீசா மே, போரிஸ் ஜான்சன் ஆகியோரின் அமைச்சரவையில் இருந்த லிஸ் டிரஸ், தற்போது பிரிட்டனின் வெளியுறவுச் செயலராக உள்ளார். 

இந்நிலையில் இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லிஸ் ட்ரஸூக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லிஸ் ட்ரஸூக்கு வாழ்த்துக்கள். தங்களுடைய தலைமையின் கீழ், இந்தியா – இங்கிலாந்து இடையேயான நட்புறவு மேலும் வலுபெறும் என்று நம்புகிறேன். உங்களுடைய புதிய பணி மற்றும் பொறுப்புகளை சிறப்பாக செய்ய வாழ்த்து” என்று குறிப்பிட்டுள்ளார்.