பைஜூஸ் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடரான லியோனல் மெஸ்ஸி

 
messi

அர்ஜென்டினா கால்பந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸியை பைஜூஸ் நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் சர்வதேச பிராண்ட் அம்பாஸ்டராக அறிவித்துள்ளது. 

பைஜூஸ் உலகளவில் கல்வி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது. ஆன்லைன் வழி கற்றல் முறையிலான கல்வி கற்பிக்கும் பிசினஸை ஸ்டார்ட் அப்-பாக தொடங்கி, குறுகிய காலத்திலேயே யுனிகார்ன் நிறுவனமாக மாறியது பைஜூஸ். பைஜூஸின் வளர்ச்சியைத் தொடர்ந்து அதே பாணியில் பல புதிய நிறுவனங்கள் ஆன்லைன் வழி கற்றலைத் தொடங்கின. இருப்பினும் பைஜூஸ் நிறுவனம் தனக்கென தனி அடையாளத்துடன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், பைஜூஸ் நிறுவனம், தனது “ அனைவருக்கும் கல்வி” என்ற சமூகப்பிரச்சாரத்தின் பிராண்ட் அம்பாசிடராக அர்ஜென்டினாவை சேர்ந்தவரும், கால்பந்து நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸியை நியமித்துள்ளது. கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளம் உள்ளது.  இவரை சமூக வலைத்தளத்தில் 45 கோடிபேர் பின்தொடர்கிறார்கள்.  பைஜூஸ் ஒப்பந்த்தில் கையொப்பமிட்டுள்ள மெஸ்ஸி சமச்சீர் கல்விக்கான காரணத்தை ஊக்கப்படுத்த உள்ளார்.  சர்வதேச தூதராக கால்பந்து வீரர் லியோனல்மெஸ்ஸியுடன் இணைந்திருப்பதை பெருமையாகக் கருதுவதாக  பைஜூஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான திவ்யா கோகுல்நாத் கூறியுள்ளார்.