அமெரிக்க பாராளுமன்றத்தில் செனட் சபையை கைப்பற்றிய ஜோ பைடன்...

 
joe biden

அமெரிக்க பாராளுமன்றத்தில் ஜோ பைடனின்  ஜனநாயக கட்சி செனட் சபை கைப்பற்றியுள்ளது.  

அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபைகளுக்கு கடந்த 8ம் தேதி தேர்தல்  நடைபெற்றது.  இதில்   பிரதிநிதிகள் சபையில் மொத்தம் உள்ள 435 இடங்களும், செனட் சபையில் மொத்தம்  உள்ள 100 இடங்களில் 35 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்நிலையில்  தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில்,  முன்னாள் அதிபர் டிரம்பின் குடியரசு கட்சிக்கும், தற்போதைய அதிபர் ஜோ பைடனின்   ஜனநாயக கட்சிக்கும் இடையே கடும் போட்டியும், இழுபறியும் நீடித்து வந்தது.

ஜோ பைடன்

 பிரதிநிதிகள் சபையில் முன்னாள் அதிபர் டிரம்பின் குடியரசு கட்சி 211 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையை  எட்டியது. அதில்  ஜனநாயக கட்சி 204 இடங்களை பெற்றிருந்தது. இந்நிலையில் செனட் சபையை அதிபர் ஜோபைடனின் ஜனநாயக கட்சி கைப்பற்றி இருக்கிறது. செனட் சபை இடங்களில் அக்கட்சி 50 இடங்களை பெற்றுள்ளது.  அதேநேரம்  குடியரசு கட்சி வசம்  48 இடங்கள் உள்ளன. இரு கட்சிகள் இடையே  பெரும் வித்தியாசம் இல்லை.  கடும் இழுபறி நிலவிய நிலையில் நெவாடாவில் ஜனநாயக கட்சி வெற்றி பெற்றதால் சென்ட் சபையை கைப்பற்றும் வாய்ப்பை பெற்றது.