ரணில் விக்ரமசிங்கேவுக்கு அடிக்கும் ஜாக்பாட்.. ரூ. 15,000 கோடி கடன் வழங்கும் ஜப்பான்

 
ரணில் விக்ரமசிங்கேவுக்கு அடிக்கும் ஜாக்பாட்.. ரூ. 15,000 கோடி கடன் வழங்கும் ஜப்பான்

இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க, ஜப்பான்  ரூ. 15 ஆயிரம் கோடி கடனுதவி வழங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  இலங்கை பிரதமராக பதவியேற்ற 3 நாட்களில் ரணில் விக்ரமசிங்கேவுக்கு கிடைத்த முதல் வெற்றியாகவே இது பார்க்கப்படுகிறது.  

 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், நேற்று முன்தினம் மாலை புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்.  அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், மகிந்த ராஜபக்சே  தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத்தொடர்ந்து  கூட்டணிக் கட்சித் தலைவர்கள், எதிர்கட்சித் தலைவர்களுடன் அதிபர் கோத்தபய ஆட்சியமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். ஆனால் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்து அவர்கள் சம்மதிக்கவில்லை.. இதனையடுத்தே முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான  ரணில் விக்ரமசிங்கே  26வது பிரதமராக பொறுப்பேற்றார்.  

ரணில் விக்ரமசிங்கேவுக்கு அடிக்கும் ஜாக்பாட்.. ரூ. 15,000 கோடி கடன் வழங்கும் ஜப்பான்

ஆனால் ரணில் விக்ரமசிங்கேவின் நியமனத்தை எந்த எதிர்க்கட்சியும் ஏற்கவில்லை.. இதனால் ரணில் தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.  பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ள ரணில்,  அத்தியாவசியப் பொருட்களான uணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், எரிபொள் போன்றவை தடையின்று கிடைக்க, சிறப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளார்.  இலங்கையின் டாலருக்கு நிகரான  மதிப்பும்  360 ரூபாயாக சரிவை கண்டுள்ளது.  அத்துடன்  அந்நிய செலாவணி கையிருப்பு கிட்டத்தட்ட பூஜ்யம் என்றாகிவிட்டது.  இதனை  அதிகரிக்கும் முயற்சியில் ரணில் விக்ரமசிங்கே இறங்கியுள்ளதாக செய்திகள்  தெரிவித்துள்ளன.

ரணில் விக்ரமசிங்கேவுக்கு அடிக்கும் ஜாக்பாட்.. ரூ. 15,000 கோடி கடன் வழங்கும் ஜப்பான்

ஏற்கனவே இந்தியா, சீனா போன்ற நாடுகள் இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டியுள்ள நிலையில்,  நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான பேச்சுவார்த்தையில் பல நாடுகள் கடன் கொடுக்க முன்வந்துள்ளன. அந்தவகையில் சுமார் 15,497 கோடி ரூபாயை கடனாக வழங்க  ஜப்பான்  முன்வந்துள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் ஏற்றுமதி நிதி அளிப்பு நிறுவனமான இந்திய எக்சின் வங்கி இலங்கைக்கு ரூ . 10,000 கோடி  வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் வாரத்தில்  அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் பொருளாதாரம் சார்ந்த பேச்சுவார்த்தை நடத்தவும் ரணில் விக்ரமசிங்கே திட்டமிட்டுள்ளார்.