தினமும் சிறுநீர் குடிப்பதால் புத்துணர்ச்சியுடன் இருக்கிறேன் - சிறுநீரில் முகம் கழுவுவதால், குளிப்பதால் பளபளப்பாக இருக்கிறேன் -ஹாரி மடாடீன்

 
h

தினமும் 200 மில்லி தனது சிறுநீரை குடிப்பதால் மனச் சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் இளமையாக இருக்கிறேன் என்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த 34 வயதான ஹாரி மடாடீன்.

 கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தனது சிறுநீரை இவ்வாறு தினமும் குடித்து வருவதாக சொல்கிறார்.   சிறுநீரைக் குடிக்க தொடங்கிய பின்னர் மன அமைதியும் ஒரு உறுதியான புதிய உணர்வு கிடைத்ததாக சொல்கிறார்.  தனது மனநல பிரச்சனைகள் தீர்ந்ததாக சொல்கிறார்.

தான் சிறுநீரை குடித்த போது அது எவ்வளவு சக்தி வாய்ந்தது  என்பதை உணர்ந்தேன் என்று தெரிவித்திருக்கும் ஹாரி,   அது கற்பனைக்கு அப்பாற்பட்டது என்கிறார். சிறுநீர் குடித்ததில் இருந்து மூளை சுறுசுறுப்படைகிறது.  மனச் சோர்வு நீங்கியது என்று சொல்லும்  ஹாரி, இத்தனையும் இலவசமாக கிடைக்கிறது என்று தான் நான் தினமும் குடித்து வருகிறேன்.  சிறுநீர் தான் என்னை மகிழ்ச்சியான மனநிலையில் எப்போதும் வைத்திருக்கிறது என்கிறார் .

h

 ஒரு நாளைக்கு 200 மில்லி சொந்த சிறுநீரை அருந்துகிறேன் என்று தெரிவித்திருக்கிறார் ஹாரி.  ஒரு மாத சிறுநீருடன் சிறிது புதிய சிறுநீரை கலந்து தினமும் குடிப்பதாக அவர் சொல்கிறார்.   

 சிறுநீரை குடித்ததன் மூலமாகத்தான் அவர்  முகம் இளமையாக இருக்கிறது என்று சொல்லும் ஹாரி,   தனது முகத்தில் மேலும் சிறுநீரைக் கொண்டு கழுவுவதால்தான் என் முகம் இளமையாக இருக்கிறது.  மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கிறது.  என் சருமத்திற்கும் சிறுநீர் பயன்படுத்துகிறேன் .  சிறுநீரை தவிர வேறு எந்த சரும பராமரிப்புக்களை பயன்படுத்துவதில்லை  என்கிறார்.

அதாவது சோப்புக்கு பதிலாக சிறுநீர்தான் பயன்படுத்துகிறேன் என்கிறார்.  

ஹாரியின் இந்த பழக்கத்தை அவரது குடும்பத்தினரை ஏற்றுக்கொள்ளவில்லையாம்.  அவரது சகோதரி கூட இதனால் அவருடன் பேசுவதை நிறுத்திக் கொண்டு இருக்கிறார் என்று வருத்தத்துடன் தெரிவித்து இருக்கிறார்.

 சிறுநீர் குடிப்பதால் புத்துணர்ச்சியுடன் இளமையுடன் பளபளப்பாக இருப்பதாக ஹாரி தெரிவித்து இருந்தாலும் மருத்துவ ரீதியாக ஆய்வு ரீதியாக இதுவரைக்கும் எந்த முடிவுகளும் அப்படி சொல்லவில்லை என்கிறார்கள்.   சொந்த குடிநீரை குடிப்பது அல்லது உடலில் உடலில் சிறுநீரை கொண்டு தேய்த்து மசாஜ் செய்வதால் நன்மைகள் ஏற்படுவதாக எந்த ஆய்வுகளும் இல்லை என்கிறார்கள்.