இசை ரசிகர்கள் அதிர்ச்சி! பிரபல பாடகி நியோமி ஜூட் தற்கொலை

 
m

பிரபல பாடகி நியோமி ஜூட் தற்கொலை செய்துகொண்டது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

si

அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி பாடகி நியோமி ஜூட்.   பாடகியான இவர் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.  பல டிவி சேனல்களின் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.

1946ம் ஆண்டில் பிறந்தவர் நியிஓமி ஜூட். தனது 76ஆவது வயதில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

பல ஆண்டுகளாக மன அழுத்தத்தில் இருந்து வந்த நியோமி ஜூட் கடந்த சனிக்கிழமை அன்று தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். வீட்டிலேயே தற்கொலை செய்திருக்கிறார்.

s

நியோமி ஜூட்டின் தற்கொலை  அவரது ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது.  

நியோமி ஜூட்டின் மரணத்திற்கு இசை பிரபலங்களும்,  சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

புகழ்பெற்ற  அமெரிக்க நாட்டுப்புற பாகியான நியோமி ஜூட்  ஐந்து முறை கிராமி விருதுகளை வென்றுள்ளார்.  

நியோமி ஜூட்டின் கணவரும் சக பாடகருமான லாரி ஸ்டிக்லான்ட்,  நவோமி மரணம் குறித்த கூடுதல் விவரங்கள் எதுவும் வெளியிடப்படாது என்றும் , குடும்பம் துக்கத்தில் இருப்பதால்  தனியுரிமை கேட்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

நியோமியின்  மகள்கள்,வைனோனா, ஆஷ்லே,  பெரும் சோகத்தை அனுபவித்தோம். எங்கள் அழகான தாயை இழந்தோம். இதனால் நாங்கள் உடைந்து போனோம். நாங்கள் ஆழ்ந்த துக்கத்தில் பயணிக்கிறோம் என்று தங்களது மன வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

மனச்சோர்வு, பதட்டம், எடிமா, வழுக்கை, நடுக்கம், தற்கொலை எண்ணங்களால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.