தொழிற்சாலை தீ விபத்து - 36 பேர் உயிரிழப்பு
Nov 22, 2022, 07:56 IST1669083983923

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 36 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அன்யாங் நகரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
வென்ஃபெங் மாவட்டத்தில் உள்ள அன்யாங் நகரில் கைசிண்டா டிரேடிங் கோ லிமிடெட் நிறுவனத்தில் உள்ள உயர் தொழில்நுட்ப மண்டலத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தீயணைப்பு குழுக்கள் 63 வாகனங்களை சம்பவ இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
நேற்று இரவு முற்றிலும் அணைக்கப்பட்டது. இன்று செவ்வாய்க்கிழமை காலை வரை 36 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இருவர் சிறு காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இரண்டு பேர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல உளவியல் ஆலோசகர்கள் சம்பவ இடத்தில் உள்ளனர்.