சீனாவில் பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 6.6ஆக பதிவு

 
earth

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் பயக்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6ஆக பதிவானது

சீனாவின் சிச்சுவான் மாகாணம் காங்டிங் நகருக்கு தென் கிழக்கே 43 கிலோ மீட்டர் தொலைவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அந்நாட்டு தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.  நிலநடுக்கத்ததால் காங்டிங் நகருக்கு தென் கிழக்கு பகுதிகளில் வீடுகள் பயங்கரமாக குலுங்கின. நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை. இதேபோல் நிலநடக்கத்தால் ஏற்பட்ட உயிர்சேதம் குறித்தும் எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இதேபோல் கடந்த 2008-ம் ஆண்டு சீனாவின் சிச்சுவானின் வென்சுலானி பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.