மீண்டும் ட்விட்டரில் இணைந்தார் டொனால்டு ட்ரம்ப்.. - எலான் மஸ்க் அதிரடி..

 
மீண்டும் ட்விட்டரில் இணைந்தார் டொனால்டு ட்ரம்ப்.. -  எலான் மஸ்க் அதிரடி.. 


அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பின் ட்விட்டர் கணக்கை  மீண்டும்  செயல்பாட்டுக்கு வந்துள்ளது.   ட்விட்டர் தளத்தில் வாக்கெடுப்பை நடத்தி  மீண்டும் ஆக்டிவேட் செய்திருக்கிறார்  மஸ்க்.

மீண்டும் ட்விட்டரில் இணைந்தார் டொனால்டு ட்ரம்ப்.. -  எலான் மஸ்க் அதிரடி.. 

வெறுப்புணர்வு மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவிட்டதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் டுவிட்டர் கணக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முடக்கப்பட்டது. ட்விட்டர் நிறுவனம் தற்போது எலான் மஸ்க் கைவசம் வந்ததும்,  டிரம்பிற்கு மீண்டும் அவரது டுவிட்டர் கணக்கை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும் என்கிற பேச்சுக்கள் எழுந்தன.  இதுதொடர்பான  விவாதங்களும் அதிகம் நடைபெற்றன.  

மீண்டும் ட்விட்டரில் இணைந்தார் டொனால்டு ட்ரம்ப்.. -  எலான் மஸ்க் அதிரடி.. 

இதனையடுத்து, டொனால்டு டிரம்பை டுவிட்டரில் மீண்டும் சேர்க்கலாமா என்பது குறித்து எலான் மஸ்க் டுவிட்டரில் வாக்கெடுப்பை நடத்தினார். கடண்ட வெள்ளிக்கிழமை மாலை தொடங்கிய இந்த வாக்கெடுப்பில் பெரும்பாலானவர்கள் டிரம்பை மீண்டும்  ட்விட்டரில் சேர்க்கலாம் என்றே பதிவிட்டு வந்தனர்.  20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாக்களித்துள்ள நிலையில், டொனால்டு டிரம்புக்கு ஆதரவாக  51.8 சதவீதம் பேரும், எதிராக  48.2 சதவீதம் பேரும் வாக்களித்திருந்தனர்.  இதனையடுத்து, டொனால்டு டிரம்பின் டுவிட்டர் கணக்கின் மீதான தடையை எலான் மஸ்க் நீக்கினார். இதனால் 22 மாதங்களுக்கு பிறகு டிரம்ப் மீண்டும் ட்விட்டரில் இணைக்கப்பட்டுள்ளார்.