இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்பு

 
srilanka pm

இலங்கையின் புதிய பிரதமராக ராஜபக்சே கட்சியை சேர்ந்த தினேஷ் குணவர்தன பதவியேற்றுக் கொண்டார். 
 
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு  ராஜபக்சே குடும்பமே காரணம் என , அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்ததும், மஹிந்த ராஜபக்சே தலைமையிலான அரசு பதவி விலகி, ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார்..  ஆனால் அதன்பிறகும் அங்கு  பிரச்சனைகளும், நெருக்கடிகளும் குறைந்தபாடில்லை. மக்கள் போராட்டமும் முடிவுக்கு வரவில்லை.   அதிபர்  மக்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்ததால் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியது.   இதனையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினருடன் மாலத்தீவுகளுக்கு தப்பியோடினார். பின்னர் அங்கிருந்து சிங்கப்பூருக்கு தப்பிச்சென்றார். பின்னர் தனது பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்தார்.  இதனை தொடர்ந்து புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று முன் தினம் நடைபெற்றது. தேர்தல் முடிவடைந்த சிறிது நேரத்திலேயே முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கே நேற்று பதவியேற்றுக்கொண்டார். 

srilanka pm

இந்நிலையில், இலங்கையின் புதிய பிரதமராக ராஜபக்சே கட்சியை சேர்ந்த தினேஷ் குணவர்தன இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கே பதவி பிரமாணம் செய்து வைத்தார். இலங்கையின் 15வது பிரதமராக பதவியேற்றுள்ள குணவர்தன நாடாளுமன்ற உறுப்பினராகவும், கேபினட் அமைச்சராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார்.