பாகிஸ்தானில் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,265 ஆக அதிகரிப்பு..

 
பாகிஸ்தான் வெள்ளம்


பாகிஸ்தானில் பருவமழை தீவிரமானதை அடுத்து அங்கு வரலாறு காணாத மழை பொழிந்து வருகிறது. மழை வெள்ள பாதிப்பில் சிக்கி இதுவரை பலியானார் எண்ணிக்கை 1,265 ஆக அதிகரித்துள்ளது.  

பாகிஸ்தானில் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,265 ஆக அதிகரிப்பு..

அண்டை நாடான  பாகிஸ்தானில்  கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில், தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கொட்டித்தீர்க்கும் இந்த  மழைப்பொழிவால் பாகிஸ்தானின்  பாதி நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. சிந்த்,  பலுசிஸ்தான் , கைபர் பக்துங்கா உள்ளிட்ட  மாகாணங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.  

பாகிஸ்தானில் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,265 ஆக அதிகரிப்பு..

வெள்ளத்தால் நாடு முழுவதும் சுமார் 3 கோடியே 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமுள்ள 150 மாவட்டங்களில் 110 மாவட்டங்கள் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில்,  சுமார் 57 லட்சம் பேர் தங்குமிடம் மற்றும் உணவு இல்லாமல்  தவித்து வருவதாக கூறப்படுகிறது.

அங்கு ஏற்கனவே ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில்,  மேலும் 57 பேர் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.  இதனால் பாகிஸ்தான் மழை வெள்ளத்தில் சிக்கி  இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை  1,265 ஆக உயர்ந்துள்ளது.  இதில் 441 குழந்தைகளும் அடங்குவார்கள்.  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளில் ராணுவம், கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.