நியூசிலாந்தின் 41வது பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்பு..

 
நியூசிலாந்தின் 41வது பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்பு..

நியூசிலாந்தின் 41வது   பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவி ஏற்றுக்கொண்டார். பிரதமர் பதவியில் இருந்து ஜெசிந்தா அடர்ன்  விலகியதை அடுத்து புதிய பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.

கடந்த 2017ம் ஆண்டு முதல்  நியூசிலாந்தின் பிரதமராக இருந்து வந்தவர் ஜெசிந்தா ஆர்டன்.  இந்நிலையில் தனது பிரதமர் பதவியை ராஜினமா செய்யப் போவதாக கடந்த வியாழக்கிழமை அன்று ஜெசிந்தா திடீரென அறிவித்தார். நியூசிலாந்தை தலைமை ஏற்று நடத்த இனியும் தன்னால் முடியாது என்றும், அதற்கான  ஆற்றல் தன்னிடம்  தீர்ந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஜெசிந்தாவின் அறிவிப்பை அடுத்து ஆளும் தொழிலாளர் கட்சியின் அடுத்த பிரதமர் வேட்பாளராக கிறிஸ் ஹிப்கின்ஸை அறிவித்தது.  44 வயதாகும் கிறிஸ் ஹிப்கின்ஸ் தற்போது அந்நாட்டின் அமைச்சராக இருந்து வருகிறார்.

நியூசிலாந்தின் 41வது பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்பு..

கடந்த 2008-ம் ஆண்டு முதல்முறையாக நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இவர், கடந்த 2020ம் ஆண்டு நவம்பரில் கொரோனா (கோவிட்-19) துறையின் அமைச்சராக நியமிக்கப்பட்டார். தற்போது அவர் காவல்துறை, கல்வி, பொது சேவை ஆகிய துறைகளின் அமைச்சராக பதவி வகித்து வருகிறார். கிறிஸ் ஹிப்கின்ஸ் நியூசிலாந்தின் பிரதமராக முறைப்படி பதவியேற்பதற்கு  முன்பு, தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதன்படி  கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவராக கிறிஸ் ஹிப்கின்ஸ் தேர்வு செய்யப்பட்ட பிறகு, ஜெசிந்தா தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் ஜெனரலுக்கு முறைப்படி அளித்தார். அதன் பிறகு, மன்னர் மூன்றாம் சார்லசின் சார்பில், கவர்னர் ஜெனரல், கிறிஸ் ஹிப்கின்ஸ்-சை பிரதமராக நியமித்தார்.