தைவான் மீது பொருளாதார தடை விதித்த சீனா.. எல்லையில் போர் பயிற்சிகள் செய்வதால் பதற்றம்..

 
தைவான் மீது பொருளாதார தடை விதித்த சீனா.. எல்லையில் போர் பயிற்சிகள் செய்வதால் பதற்றம்..

சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி  அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி,  தைவான் சென்றுள்ளதால் அந்நாட்டின் மீது  சீனா  பொருளாதார தடை மற்றும் இறக்குமதி தடையை விதித்துள்ளது.   

சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, தைவான் சென்றிருக்கிறார்.  25 ஆண்டுகளில் தைவான் சென்றுள்ள அமெரிக்க மக்கள் பிரதிநிதி நான்சி பெலோசியே ஆவார்.  தைவான் சென்றுள்ள பெலோசிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.  அதேநேரம்  பெலோசி  பயணம் ஒரே சீனா என்ற கொள்கையை மீறிய செயல் என்று விமர்சித்து இருக்கும் சீனா, தைவான் மீது  ராணுவ மற்றும் பொருளாதார நெருக்கடியை சீனா அதிகரித்துள்ளது.

தைவான் மீது பொருளாதார தடை விதித்த சீனா.. எல்லையில் போர் பயிற்சிகள் செய்வதால் பதற்றம்..

அதாவது, ரொட்டிகள், வேகவைத்த பொருட்கள், இனிப்புகள் உள்ளிட்ட உற்பத்தி நிறுவனங்களுக்கு  தடை விதித்திருக்கிறது. அத்துடன்  தேயிலை பொருட்கள், உலர் பழங்கள், தேன், காய்கறி மற்றும் மீன்களையும் கறுப்புப் பட்டியலில்  சேர்த்துள்ள சீனா,   பதிவு செய்யப்பட்ட 107 தைவான் நிறுவன பொருட்களை  கறுப்புப் பட்டியலில் சேர்த்திருக்கிறது.  இதனை தைவான் வேளாண் கவுன்சிலும்    உறுதிபடுத்தியிருக்கிறது.   
 தைவான் மீது பொருளாதார தடை விதித்த சீனா.. எல்லையில் போர் பயிற்சிகள் செய்வதால் பதற்றம்..
 மேலும்,  35  தைவான்  நிறுவனங்களின் இறக்குமதி உரிமைத்தையும்   சீனா தற்காலிமாக நிறுத்திவைத்துள்ளது.  அதுமட்டுமின்றி  தைவானை சுற்றி நேற்று நள்ளிரவு முதல் சீனா  போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.  21  சீன போர் விமானங்கள் தைவான் எல்லையை சுற்றி வருகின்றன. அதேபோல்  தைவான் எல்லையில் சீனா  போர் கப்பல்களையும்  தயார் நிலையில்  வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..  மேலும்,  சீனாவின் கனரக வாகனங்கள் ஆயுதங்களை சுமந்தபடி தைவான்  எல்லை  நோக்கி படையெடுத்து வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. அமெரிக்கா மற்றும் தைவானின் இதுபோன்ற அபாயகரமான செயல்பாடுகளுக்கு   பதில் அளிக்கும் விதமாக ராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தியுள்ளதாக  சீனா தெரிவித்திருக்கிறது.